/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
/
புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
ADDED : ஜூலை 09, 2025 12:47 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசேவலை கிராமத்தை சார்ந்தவர் காசியம்மாள்,74; இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, வீட்டில் கேஸ் அடுப்பை கீழே வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த புடவையில் தீப்பிடித்தது. காசியம்மாள் அலறி அடித்துக் கொண்டே வீட்டிலிருந்து வெளியே வந்து மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.