/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
/
தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
ADDED : பிப் 17, 2024 11:46 PM

வானுார்: எறையூர் ஊராட்சியில் பொது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே துவங்கிய ஓட்டத்தை எறையூர் ஊராட்சி தலைவர் சாவித்ரி லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் உறுதிமொழியேற்கப்பட்டது.
மாரத்தான் ஓட்டத்தில், எறையூர், திருவக்கரை, தழுதாளி, மயிலம், சின்னநெற்குணம், டி.பரங்கனி மற்றும் சுற்று வட்டார பகுதி பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 65 வயது முதியவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலை, கோபால், ஜெய்சங்கர், நவீன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டிகளை எறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மோகனகுமார், பாஸ்கர், ஆசிரியர்கள் மோகன முருகன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.