/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை
/
தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை
ADDED : மார் 18, 2024 05:43 AM

திருக்கோவிலுார், : லோக்சபா தேர்தலை யொட்டி பறக்கும் படையினர் திருக்கோவிலுார் அடுத்த தபோவனத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சபரி தாசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் மேரி, தலைமைக் காவலர்கள் கோதண்ட ராமன், தீனதயாளன் கேமரா பதிவுடன் உரிய ஆவணங்களின்றி பணம்மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறதா என வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் சுஜாதா தலைமையில் போலீசார் அம்சா, கிருஷ்ணதாஸ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பேன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அனைத்து பொருட்களும் திருச்சியில் உள்ள கடைக்கு உரிய ஆவணங்களுடன் செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

