/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு அலுவலர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்தல்
/
அரசு அலுவலர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்தல்
ADDED : ஜூலை 04, 2025 01:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த தேர்தலில், மாநில துணை தலைவர் ஆலிஸ்ஷூலா முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவராக நாகராஜன், மாவட்ட செயலாளராக பீம்ராஜ், மாவட்ட பொருளாளராக தணிகைவேலன், துணை தலைவர்களாக மோகன், நடராஜன், ஜனநாயகன், கோவிந்தராஜ், மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் பிரச்சார செயலாளர்களாக பாலமுருகன், ராஜேஷ், இளைஞரணி செயலராக எட்வின், இணை செயலாளர்கள் ஞான பண்டிதமணி, கோதண்டபாணி, தேவேந்திரன், தணிக்கையாளர் அப்துல்கரீம், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதர், இலக்கிண அணி பாலாஜி, செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, விஜயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.