/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி
/
கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி
ADDED : டிச 12, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாபமாக பலியானார்.
கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சிங்காரம் மகன் சத்தியராஜ,38; இவர் கண்டாச்சிபுரத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.
நேற்று காலை 7 மணி அளவில் நல்லாப்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை பார்வையிடச் சென்றுள்ளார்.
சிறு வயது முதல் வலிப்பு நோய் உள்ள சத்தியராஜ் விவசாயக் கிணற்றின் அருகில் சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சத்தியராஜின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்து மனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

