/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்
ADDED : ஏப் 06, 2025 05:37 AM

செஞ்சி : செஞ்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை, செயற்பொறியாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி துவக்கி வைத்து, நுகர்வோரிடம் மனுக்களை பெற்றார். உதவி செயற் பொறியாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
இளமின் பொறியாளர் முருகன் வரவேற்றார். இளமின் பொறியாளர்கள் செந்தில்குமார், சிவப்பிரியா, முத்துக்குமரன் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் குறைகளை நேரிலும், மனுவாகவும் தெரிவித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் மனு குறித்து விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
'தினமலர்' செய்திக்கு பதில்
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என' தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, 'தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருவதால், தேர்வு முடிந்த உடன் மின் கம்பங்கள் சாலை ஓரம் நகர்த்தப்படும்' என்றார்.

