/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 30, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடப்பதாக, விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆகஸ்ட் மாத கோட்ட அளவிலான குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
வரும் 5ம் தேதி விழுப்புரம்; 12ம் தேதி கண்டமங்கலம்; 19ம் தேதி செஞ்சி; 26ம் தேதி திண்டிவனம்;
28ம் தேதி திருவெண்ணெய்நல்லுார்; ஆகிய பகுதி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.