/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஆக 06, 2025 01:01 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில், கோட்ட அளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தலைமை தாங்கி, மின் நுகர்வோர் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இதில் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, விவசாய மின் இணைப்பு, வணிக மின் இணைப்பு, குறைந்த மின்னழுத்த பிரச்னை, டிரான்ஸ்பார்மர் பழுது, வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோருதல் உள்ளிட்ட மனுக்களை கொடுத்தனர்.
பொதுமக்களின் மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தெரிவித்தார்.
கூட்டத்தில் மின் செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

