/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கம்யூ., பேரணியில் மின் ஊழியர் பலி
/
கம்யூ., பேரணியில் மின் ஊழியர் பலி
ADDED : ஜன 04, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் மா.கம்யூ., மாநாட்டு பேரணியில் பங்கேற்ற மின் ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
சென்னை அடுத்த பல்லாவரம் குளத்துமேட்டை சேர்ந்தவர் ஆனந்த்,59; மின்வாரிய ஊழியரான இவர், விழுப்புரத்தில் நேற்று நடந்த மா.கம்யூ., மாநில மாநாடு பேரணியில் நடந்து சென்றவர், விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.