/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுப்பிக்கப்பட்ட பூங்கா அவசரகதியில் திறப்பு
/
புதுப்பிக்கப்பட்ட பூங்கா அவசரகதியில் திறப்பு
ADDED : மார் 16, 2024 11:27 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், புதுப்பிக்கப்பட்ட நடைபயிற்சி பூங்கா திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறுவர் பூங்கா, நீருற்று, கைப்பந்து, இறகு பந்து மைதானம், தியான அறை, உடற்பயிற்சி கூடம், சிற்றுண்டி கட்டடம், கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பழனி திறந்து வைத்தார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
பூங்காவில், இன்னும் தரை தளம் பகுதிகள் சீரமைக்காமலும், செடிகள், மரக்கன்றுகள் அவசரமாக நடப்பட்டு அரை குறையாய் உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு நேற்று மாலை 3 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், திடீரென அவசர, அவசரமாக நேற்று காலை பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஷீலாதேவி சேரன், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகராட்சி கமிஷனர் ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள பங்கேற்றனர்.

