/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை வாய்ப்பு முகாம் 643 பேருக்கு நியமன ஆணை
/
வேலை வாய்ப்பு முகாம் 643 பேருக்கு நியமன ஆணை
ADDED : அக் 05, 2024 11:30 PM
விழுப்புரம்: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 140 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 37 மாற்றுத் திறனாளிகள், 3,075 பெண்கள் உட்பட 5,428 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர்.
முகாமில், 417 பெண்கள், 13 மாற்றுத் திறனாளிகள் உட்பட 643 பேர் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கினார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.