/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
சூர்யா கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 25, 2024 03:50 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் சென்னை வொர்ககால் சொலுயுசன்ஸ் பி லிட் நிறுவனத்தின் சார்பில் மனிதவள மேலாளர்கள் சரண்யா,சுபைதா ஆகியோர் கலந்து கொண்டு கல்லுாரி மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஆண்டுக்கு 5லட்சம் ரூபாய் சம்பளத்தில் 13 பேரை தேர்வு செய்தனர்.
கல்லுாரி தலைமை செயல் அலுவலர் விசாலாட்சி பொன்முடி தேர்வு செய்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் டாக்டர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், வேலை வாய்ப்பு அதிகாரி மனோசந்தர், துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.