/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்
/
திண்டிவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 16, 2025 01:07 AM
விழுப்புரம் : திண்டிவனத்தில் வரும் 19ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த, 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் தேவையான பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முகாமில், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற கல்வித்தகுதி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களும், வேலை தேவைப்படுவோரும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.