/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
/
விழுப்புரத்தில் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 15, 2025 04:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை நிரப்ப உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதியுடன், வேலைதேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்று தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
இந்த முகாமிற்கு வந்து பணி வாய்ப்பு பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார், பயோடேட்டாவோடு வர வேண்டும்.