/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
செஞ்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 07, 2025 11:24 PM
விழுப்புரம்: செஞ்சியில் வரும் நாளை மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் விழா நாளை காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம். 18 முதல் 40 வரை உள்ள ஆண், பெண் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.