
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரி வேலைவாய்ப்பு பிரிவு, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் அகாடமிக் டீன் முத்துராஜா முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் ஆட்சேர்ப்பு சங்கம் முதன்மைச் செயல் அதிகாரி செல்வகுமார் சிறப்புரையாற்றி, முகாமில் பங்கேற்ற 16க்கும் மேற்பட்ட பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டார். முகாமில், 150 பேர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை இந்துமதி நன்றி கூறினார்.