/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்... அசத்தல்: இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை
/
வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்... அசத்தல்: இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை
வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்... அசத்தல்: இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை
வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்... அசத்தல்: இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை
ADDED : செப் 15, 2025 02:35 AM

மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சியில் படித்து 855 பேர் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் கல்வி கற்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதேபோன்று, அரசு வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
உதவியாளர் வேலையாக இருந்தாலும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
வருவாய் துறையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் ஆர்.டி.ஓ., - தாசில்தார், நகரா ட்சி கமிஷ்னர், டி.எஸ்.பி., - துணை கலெக்டர் உள்ளிட்ட மிக முக்கிய பணிகளுக்குத் தேவையானவர்கள் போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதேபோன்று தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை போன்ற சீருடைப் பணியிடங்களுக்கான தகுதியான நபர்களை போட்டி தேர்வு மூலம் தேர்வாகின்றனர்.
இந்த போட்டி தேர்வுகளில் வெற்றி பெற படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.
அப்படி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த 2010-11ம் நிதியாண்டில் இருந்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 மற்றும் டெட் பேப்பர் 1, 2 மற்றும் யூ.ஜி., டி.ஆர்.பி., - பி.ஜி., டி.ஆர்.பி., மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணி, சப் இன்ஸ்பெக்டர், பார்மாசிஸ்ட் ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், போட்டி தேர்வை எதிர்கொள்ள மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது. இங்கு கடந்த, 2010-11ல், 107 பேர் பயிற்சி பெற்றதில், 19 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோன்று கடந்த, 2011-12ம் ஆண்டு 273 பேரில் 12 பேர்; கடந்த, 2012-13ல் 105 பேரில் 4 பேர்; கடந்த, 2013-14ல் 248 பேரில் 5 பேர்; கடந்த, 2014-15ல் 1099 பேரில் 38 பேர், தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து கடந்த, 2015-16ல் 1186 பேரில் 26 பேர்; கடந்த, 2016-17ல் 310 பேரில் 19 பேர்; கடந்த, 2017-18ல் 852 பேரில் 49 பேர்; கடந்த, 2018-19ல் 821 பேரில் 62 பேர்; கடந்த, 2019-20ல் 1085 பேரில் 64 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோன்று கடந்த, 2020-21ல் 599 பேரில் 67 பேர்; கடந்த, 2021-22ல் 858 பேரில் 88 பேர்; கடந்த, 2022-23ல் 789 பேரில் 179 பேர்; கடந்த, 2023-24ல் 651 பேரில் 80 பேர்; கடந்த, 2024-25ல் 462 பேரில் 134 பேர் நடப்பாண்டில் இதுவரை 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவரை இலவச பயிற்சி மையத்தில் படித்து 855 பேர் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுள்ளனர்.
மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சியில் பங்கேற்று அரசு வேலைக்கு சென்று பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-நமது நிருபர்-