/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
/
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
ADDED : செப் 05, 2025 07:54 AM
விழுப்புரம்; தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தாட்கோ, சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் ஆகியவற்றை அளிக்க உள்ளது.
டிரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் ஆகியவை சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
எம்பெடெட் சென்சார் சோதனை, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்பு பயிற்சி திட்டம் போன்றவற்றிற்கு,18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள்
தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.