ADDED : மார் 20, 2026 08:51 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால், இடுகாடு இடம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
விழுப்புரம் அடுத்த வளவனுார் பேரூராட்சியின் மழைநீர் வடிகால் வாய்க்கால், நரையூர் எல்லையில் செல்லும் ஓடையில் முடிகிறது. இந்த வாய்க்கால் மற்றும் அங்குள்ள ஆதிதிராவிடர், பழங்குடி இருளர் மக்களுக்கான இடுகாடு இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், வருவாய் துறை அலுவலர்கள், அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
