/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பைக் விபத்தில் பலி
/
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பைக் விபத்தில் பலி
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பைக் விபத்தில் பலி
திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பைக் விபத்தில் பலி
ADDED : பிப் 23, 2026 04:12 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர் இறந்தார்.
கரூர் மாவட்டம், சனப்பிராட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்குமார், 24; செஞ்சியில் தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கரூருக்குச் செல்ல தனது பைக்கில் செஞ்சியிலிருந்து புறப்பட்டார்.
இரவு 10:00 மணியளவில் செஞ்சி - விழுப்புரம் சாலையில் விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம் தனியார் பள்ளி அருகே சென்ற போது பைக் நிலை தடுமாறி இடது புறத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே லோகேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகார் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

