/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயிற்று வலியால் இன்ஜினியர் இறப்பு
/
வயிற்று வலியால் இன்ஜினியர் இறப்பு
ADDED : ஜூன் 30, 2025 03:08 AM
வானுார்: வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவன இன்ஜினியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வானுார் அடுத்த எடப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயப்பிரகாஷ், 22; இவர் புதுச்சேரி மாநிலம், திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த 22ம் தேதி அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, உடல் நலம் பாதிக்கப்பட்டது.
அவரை உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயபிரகாஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.