/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
/
தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : அக் 27, 2024 11:43 PM

செஞ்சி : வல்லம் ஒன்றியத்தில் தொழில் முனைவோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், இணை மானிய திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. புதிய தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், அரசின் மானியங்கள் குறித்தும், புதிய தொழில் துவங்குவதற்கான வழி முறைகள் குறித்தும் மோகன் பயிற்சி அளித்தார்.
அரசின் மானிய திட்டங்கள் குறித்து கோபால், கார்திக் ஆகியோர் விளக்கினர். பயிற்சி முடித்தவர்களுக்கு பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோவன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.