நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் பெலாக்குப்பம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் ரகுராம் அடிகளார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பள்ளியில் பள்ளி மாணவ, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
இதில் பள்ளி நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் முதல்வர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.