/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
/
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:08 AM

மயிலம் : மயிலம் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் ராஜிகுமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியன் வரவேற்றார்.
விழாவையொட்டி, கல்லுாரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபட்டனர். தொடர்ந்து கோலாட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி கள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியை வள்ளி நன்றி கூறினார்.
திண்டிவனம்
திண்டிவனம் சாணக்யா மேல்நிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, சாணக்யா கல்வி குழுமத் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் அருள்மொழி வரவேற்றார்.
அரிமா சங்கத் தலைவர் சிவக்குமார், செயலாளர் ஐங்கரன், பொருளாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கார்த்திக், வழக்கறிஞர் ஏழுமலை, வாணியர் சங்க நிர்வாகிகள் பாலாஜி, கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீராம் பள்ளியில் பொங்கல் விழா
ஓமந்துார் ஸ்ரீராம் மற்றும் வேலம்மாள் போதி பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் தலைமை தாங்கினார். விழாவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சைகை மொழி பேராசிரியர் அட்சுயோஷி, அயக்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் புதுப்பானை வைத்து பொங்கலிட்டனர். தொடர்ந்து பிற்பகல் நடந்த கலை நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்லைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முருகையன், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மேக்டலின் பெட்ராக், கர்ட்டனி புலச்சர் பங்கேற்றனர்.
கண்டமங்கலம்
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் நடந்த விழாவிற்கு ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி வரவேற்றார்.
ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் குமார், கண்ட மங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் சேகர், சுமதி, கண்காணிப்பாளர் பொன்னுசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அரிக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனார்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் பானையில் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.