/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஈரோடு ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்
/
ஈரோடு ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்
ஈரோடு ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்
ஈரோடு ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்
ADDED : ஜூலை 22, 2025 06:29 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே ஜனாதிபதி பாராட்டை பெற்ற பரையந்தாங்கல்  ஊராட்சி செயல்திட்டங்களை ஈரோடு மாவட்ட  ஊராட்சி செயலாளர்கள் பட்டறிவு பயணமாக பார்வையிட்ட னர்.
ஊரக வளர்ச்சி , ஊராட்சி துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஊராட்சி செயலாளர்கள் பட்டறிவு பயணமாக ஒருங்கிணைப்பாளர் சங்கீதா தலைமையில் பரையந்தாங்கல் கிராமத்திற்கு வந்தனர். ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார்.
மேல்மலையனுார் பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி ஆகியோர் ஊராட்சியின் சிறப்பு பணிகள் குறித்து விளக்கினர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துணை பி.டி.ஓ.,க்கள் உஷாராணி, சண்முகம், செந்தில்குமார், லட்சுமி, வெங்கடேஷ், விமலாதேவி, ராதாமணி, முத்துகிருஷ்ணன், சுரேஷ்குமார்வந்திருந்தனர். இங்குள்ள கட்டமைப்புகள், பதிவேடுகள், துாய்மை பணிகள், சுகாதார வளாகம், மகிளாசபா, பாலசபா, நிலைக்குழுக்கள், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
முதன்மை பயிற்றுநர் கலியமூர்த்தி, துணை தலைவர் ராஜசேகர், வார்டு உறுப்பினர் அருள்தாஸ், துறை சார்ந்த அலுவ லர்கள் பங்கேற்றனர்.

