/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்விக்குழும தலைவருக்கு விருது
/
இ.எஸ்., கல்விக்குழும தலைவருக்கு விருது
ADDED : அக் 18, 2024 07:21 AM

விழுப்புரம்: புதுச்சேரியில் ஐ.சி.டி., அகாடமி சார்பில் 'பிரிட்ஜ் 24' தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று அகில இந்திய அளவில் கல்வியில் சிறந்த பங்களிப்பை செலுத்திய கல்வியாளர்களுக்கு, 'தி எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர்' விருதை விழுப்புரம் இ.எஸ்., கல்விக் குழுமங்களின் நிர்வாக தலைவர் செந்தில்குமாருக்கு வழங்கினார்.
இந்த விருது, கல்விசார் வல்லுனர்களால் பாடத்திடம், தேர்வுமுறை, தொழில் முனைவு திறன், வேலைவாய்ப்பு, மாணவ பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆராய்ச்சியில் சாதனை, புதுமை அல்லது புதிய திட்டங்களை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.