ADDED : நவ 18, 2024 06:30 AM

விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டடம் நடந்தது.
இ.எஸ்., கல்விக்குழும தாளாளர் செல்வமணி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
2023-24ம் ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி நிறுவனர் சாமிக்கண்ணு, சாந்தா சாமிக்கண்ணு, இ.எஸ்., கல்விக் குழுமம் பொதுச் செயலாளர் பிரியா செல்வமணி மற்றும் குடும்பத்தினர், இ.எஸ்., கல்விக்குழும முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.