/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாமி வரம் கொடுத்தும் நடக்கலையே போலீசார் புலம்பலோ புலம்பல்
/
சாமி வரம் கொடுத்தும் நடக்கலையே போலீசார் புலம்பலோ புலம்பல்
சாமி வரம் கொடுத்தும் நடக்கலையே போலீசார் புலம்பலோ புலம்பல்
சாமி வரம் கொடுத்தும் நடக்கலையே போலீசார் புலம்பலோ புலம்பல்
ADDED : டிச 24, 2024 05:59 AM
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போலீசார் வீட்டிற்கு போகாமல் திருவண்ணாமலை பகுதியிலேயே தங்கி பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டதால் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம், பணியிலிருந்த போலீசார் அனைவரும், கடந்த 16 மற்றும் 17 ம் தேதி இரண்டு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். அதன்படி தீப பணிக்கு சென்றவர்கள் 18 ம் தேதி பணிக்கு வந்தால் போதும் எனக் கூறப்பட்டது.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் உட்கோட்டத்திலிருந்தும் 600க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் பெரும்பாலான போலீசார் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை வழங்கவில்லை. சிலருக்கு மட்டம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டது. ஸ்டேஷனில் உள்ள போலீஸ் பற்றாக்குறையை காரணம் காட்டி, மறுநாளே பணிக்கு வரவழைத்துவிட்டதாக போலீசார் புலம்புகின்றனர்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஓபன் மைக்கில் உத்தரவிட்டும், விடுமுறை வழங்கப்படாதது ஏன் என்று போலீசார் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.