/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் சேர்ந்து பயில உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
/
மகளிர் கல்லுாரியில் சேர்ந்து பயில உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
மகளிர் கல்லுாரியில் சேர்ந்து பயில உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
மகளிர் கல்லுாரியில் சேர்ந்து பயில உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
ADDED : ஏப் 27, 2025 07:18 AM

விழுப்புரம் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி இணைந்து பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உதவித் தொகை பெறுதலுக்கான தேர்வு வரும் மே 15ம் தேதி நடக்கிறது.
இ.எஸ்., கல்விக்குழும நிர்வாக தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்க பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான வினாக்கள் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும்.
தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, மொத்தம் 30 லட்சம் ரூபாய் கல்வி உதவிதொகை வழங்கப்பட உள்ளது. முதல் 25 இடங்களைப் பெறுவோருக்கு 80 சதவீதமும், அடுத்த 50 இடங்களைப் பொறுவோருக்கு 70 சதவீதமும், 100 இடங்களைப் பெறுவோருக்கு 60 சதவீதமும் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு எழுதி பி.எஸ்சி., கணினி அறிவியல், ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, ஐ.டி., விஸ்காம், சைக்காலஜி, பயோ டெக்னாலஜி, கிளினிக்கல் நியூட்ரிஷன் மற்றும் டயாபிடிக்ஸ், காஸ்ட்யூம் டிசைன் பேஷன், கணிதம் (டேட்டா அறிவியல்), இயற்பியல் (நானோ அறிவியல் மற்றும் டெக்னாலஜி), தாவரவியல், வேதியியல் (தடய அறிவியல்), பயோகெமிஸ்ட்ரி துறைகளில் சேரலாம்.
பி.காம்., - பி.ஏ., - பி.சி.ஏ., - பி.பி.ஏ., பட்டப்படிப்பு துறைகளிலும் சேர்ந்து கற்றல், திறன் மேம்பாடு, தொழில்முனைவு திறன் ஆகியவற்றோடு 100 சதவீதம் வேலைவாய்ப்பை அளிக்கும் இ.எஸ்., கல்விக்குழுமம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தங்களின் எதிர்காலத்தை ஏற்றமுடையதாக உருவாக்கலாம்.
கல்வி உதவி தொகைக்கான தேர்வெழுத https://tinyurl.com/bdhvuv7w இணையத்தில், வரும் மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வளாகத்தில் தேர்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.