/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காய்கறி சாகுபடி குறித்து விளக்கம்
/
காய்கறி சாகுபடி குறித்து விளக்கம்
ADDED : ஜன 05, 2025 05:13 AM
மரக்காணம்:  மரக்காணம் அடுத்த சிறுவாடியில் எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் காய்கறிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் பயிர் சாகுபடி குறித்து விளக்கமளித்தனர்.
எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜவஹர்லால் மேற்பார்வையில், மரக்காணம் அடுத்த சிறுவாடியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் பாதுகாக்கப்பட்ட அமைப்பில் காய்கறி சாகுபடி பற்றியும், பழங்களின் மதிப்பு கூட்டுதல், வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிர் சாகுபடி செய்வது குறித்தும், உயிர் வாயு உற்பத்தி பற்றி விளக்கமளித்தனர்.  முனைவர் மாலதி, உதவி பேராசிரியர்கள் ஷீலா, ராஜீவ், மலர், கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மரியாரெசா குழுவை சேர்ந்த மாணவிகள் காந்திமதி, கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

