ADDED : அக் 21, 2026 05:10 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கூலி தொழிலாளி வீட்டில் நாட்டு வெடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியை சேர்ந்தவர் சந்திரமோகன், 44; இவர் குண்டலபுலியூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில், சுமை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு 12:30 மணியளவில் இவரது வீட்டின் முன்பு உள்ள சிமெண்ட் கடையில் எதிரில் மர்ம நபர்கள் நாட்டு வெடியை வீசி உள்ளனர்.
பலத்த வெடி சத்தம் கேட்ட சந்திரமோகன் துாக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்தபோது புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரமோகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கெடார் போலீசார் தடவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சந்திரமோகன் வீட்டின் எதிரே வசிக்கும் த.வெ.க., கிளைச் செயலாளர் சுப்பு என்கிற பாலசுப்பிரமணியன், 24; கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்த தகராறு காரணமாக, அவருடைய வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசுவதற்கு பதிலாக சந்திர மோகன் வீட்டில் வீசியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கெடார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
