/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள், முதியோர் இல்லங்கள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
/
குழந்தைகள், முதியோர் இல்லங்கள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
குழந்தைகள், முதியோர் இல்லங்கள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
குழந்தைகள், முதியோர் இல்லங்கள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
ADDED : நவ 01, 2024 06:26 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு இல்லங்களை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளி, போதை பொருட்களுக்கு அடிமையானோர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், மனநலம் பாதித்தோர் இல்லங்கள் மற்றும் விடுதிகளை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை பதிவு செய்யாமல் செயல்படும் இல்லம், விடுதிகளை பதிய விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் இல்லம் https://dsdcpimms.tn.gov.in அல்லது மாவட்ட குழந்தை நல அலுவலகத்தில் பதியலாம்.
முதியோர் இல்லங்களை www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in அல்லது சமூக நல அலுவலகத்திலும், மனவளர்ச்சி குன்றிய இல்லத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமும், மறுவாழ்வு இல்லத்தை https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php அல்லது முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்பாக்கம், சென்னை 10 இடத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.
இதே முகவரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதியை https://tnswp.com அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம் மூலமாகவும், மனநலம் பாதித்தோருக்கான இல்லத்தை https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php பதியலாம். பதிவு செய்யாத இல்லங்கள் 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.