/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : மே 23, 2025 12:34 AM
விழுப்புரம் : அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விரைவில் துவங்கப்படஉள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஏப்ரல் 16ம் தேதி முதல் மே 6ம் தேதி மாலை 5:30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது விண்ணப்பத்திற்கான கால அவகாசம் வரும் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 20 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும். பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு, பட்டய படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற கல்வி தகுதியுடைய கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். கடந்த 1ம் தேதி அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.