/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவ பிரீமியத்திற்கு காலவரம்பு நீடிப்பு
/
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவ பிரீமியத்திற்கு காலவரம்பு நீடிப்பு
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவ பிரீமியத்திற்கு காலவரம்பு நீடிப்பு
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவ பிரீமியத்திற்கு காலவரம்பு நீடிப்பு
ADDED : ஆக 06, 2025 01:05 AM
விழுப்புரம்; பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26 காரீப் பருவ நெற்பயிருக்கு காப்பீடு காலவரம்பு நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப் பருவத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 380 வருவாய் கிராமங்களில். நெல்--1 பயிர் காப்பீடு செய்ய அறி விக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கடலை 24 குறுவட்டங்களிலும், கம்பு 8 குறுவட்டங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காரீப் பருவத்தில் நெல்-1 நடவு செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்யும் காலவரம்பு வரும், 14ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். நிலக்கடலை, கம்பு நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யூனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நெல்- 1 பயிருக்கு ஒரு ஏக்கர் காப்பீடு பிரிமியமாக விவசாயி சார்பில் ரூ.725.71 ( காப்பீட்டுத் தொகை ரூ.36, 285. 31) வரும் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதேபோல் நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கர் பிரிமியமாக ரூ.523.75 (காப்பீட்டுத் தொகை ரூ.31,187.37), கம்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரியமாக ரூ. 239.90 (காப்பீட்டுத் தொகை ரூ.11,995.14) வரும் 30ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.
இதற்கு விவசாயிகள் சார்பில் நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விவசாயியின் பெ யர், நிலப் பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை விவசாயிகள் சரியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களை அறிய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.