ADDED : மார் 11, 2024 07:04 AM

வானுார், : ஆரோவில் கிராம செயல் வழிக்குழு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பொம்மையார்பாளையத்தில் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை, ஆரோவில் கிராம செயல் வழிக்குழு திட்ட இயக்குனர் மோரீஸ், ஊராட்சி தலைவர் ஜெகதீசன் துவக்கி வைத்தனர்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கொண்ட குழுவினர், கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, துாரப்பார்வை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் விஜயலட்சுமி நாகராஜன், பொம்மையார்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் பாலு, வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், மஞ்சினி, ஊராட்சி செயலாளர் கிருபானந்தம், சிவசங்கரன், மக்கள் நலப் பணியாளர் கோவிந்தன் மற்றும் ஆரோவில் கிராம செயல் வழிக்குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
