ADDED : ஏப் 28, 2025 04:52 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: அனந்தபுரத்தில், ரோட்டரி சமுதாயக் குழுமம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் பாஷிதா மற்றும் பவதாரணி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 75 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
அதில் 25 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிம்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், மதிவாணன் பங்கேற்றனர்.
