/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து தகராறில் வீட்டை சுற்றி பென்சிங் போட்டு சிறை வைப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

ADDED : ஜூலை 22, 2025 06:33 AM
விழுப்புரம் : திண்டிவனம் அருகே புதுாரைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மனைவி கோமதி, 65; இவர், நேற்று தனது மகன் மற்றும் மகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
புதுார் முருகன் கோவில் தெருவில், மகன், மகளுடன் வசித்து வருகிறேன். வெளியூரில் வசித்து வரும் எனது கணவரின் மற்றொரு மனைவியின் மகனான ஞானவேல் தரப்புக்கும், எங்களுக்கும் உள்ள பொது வீட்டு மனை, விவசாய நிலத்தை பிரிப்பதில் பிரச்னை உள்ளது.
நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான பொது குடும்ப சொத்து வழி சுற்றிலும் பென்சிங் போட்டு வழியை மூடி, ஞானவேல் பூட்டிவிட்டார்.
இதனால், எங்கள் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் நாங்கள் தவித்தோம்.
எங்கள் கிராமத்தினர் வந்து, ஏணி வைத்து, கம்பி வலையை தாண்டி எங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
வீட்டைச் சுற்றி கம்பி வேலி போட்டு எங்களை சிறை வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.