ADDED : பிப் 17, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வெங்கந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார், 50; விவசாயி. இவர் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் தனது நிலத்தில்உள்ள கரும்புகளை காட்டுப்பன்றிகள் புகுந்து நாசம் செய்வதைத் தடுக்க வெளிச்சம் அமைக்க மின் விளக்கு வசதி ஏற்படுத்தினார். பின், மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.