ADDED : மார் 11, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே விஷ குளவி கொட்டி விவசாயி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 55; விவசாயி. இவர், கடந்த 2ம் தேதி மாலை 3:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தை பார்க்கச் சென்றார்.
அப்போது திடீரென குளவி கொட்டி சுப்ரமணி அங்கேயே மயங்கி விழுந்தார். உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணி நேற்று காலை இறந்தார்.
புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
