ADDED : அக் 10, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.
மயிலம் அருகே பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 53; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பைக்கில், தனது கிராமத்திலிருந்து கூட்டேரிப்பட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.