/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்
/
சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 06:06 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகம் எதிரே, கண்டித்து விவசாயி நாற்றுகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 34; விவசாயி. இவரது நிலத்தை அளவீடு செய்வதற்காக ஐகோர்ட்டில் ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பெற்றார்.
தொடர்ந்து மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் சர்வேயரிடம் நிலம் அளவீடு செய்யக்கோரி பல முறை மனு அளித்துள்ளார். ஆனால், சர்வேயர் நிலம் அளப்பது குறித்து முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயி, நேற்று மதியம் தாலுகா அலுவலகம் எதிரே தனது ஆதரவாளர்களுடன் சென்று, நாற்றுகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
வருவாய்த் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை (இன்று) நிலம் அளவீடு செய்யப்படும் என தெரிவித்த பின் விவசாயி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

