ADDED : அக் 03, 2026 12:02 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 46; விவசாயி. இவர், சர்க்கரை மற்றும் அல்சர் நோய் பாதிக்கப்பட்டு நீண்டநாட்களாக அவதிப்பட்டு வந்தார். கடந்த 29ம் தேதி அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்றவர், கடும் வயிற்று வலி காரணமாக விரக்தியடைந்து, பூச்சி மருந்து குடித்தார்.
உடன் அவரை உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
