/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை கத்தியால் குத்திய விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
/
முதியவரை கத்தியால் குத்திய விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
முதியவரை கத்தியால் குத்திய விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
முதியவரை கத்தியால் குத்திய விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : பிப் 25, 2026 06:35 AM

திண்டிவனம்: முதியவரை கத்தியால் குத்திய விவசாயிக்கு திண்டிவனம் கோர்ட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, கிளியனுார், அண்ணா நகரை சேர்ந்தவர் குப்புசாமி, 70; இவரது வீட்டின் அருகே வசிப்பவர் பிரகாஷ், 40; விவசாயி. இவர், கடந்த 2013 டிசம்பர் 24ம் தேதி மாலை அவரது தம்பி வீட்டில் சொத்து குறித்து தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த குப்புசாமி, சண்டையை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ், கத்தியால் குப்புசாமி வயிற்றில் குத்தினார்.
பலத்த காயமடைந்த குப்புசாமி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார், பிரகாஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர். வழக்கு திண்டிவனம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை நடத்திய நீதிபதி கிறிஸ்டின், முதியவரை தாக்கிய பிரகாஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

