sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கம்புக்கான விலை குறைப்பால் விவசாயிகள் வேதனை! மூட்டை ரூ.12,000லிருந்து ரூ.6,200க்கு குறைந்தது

/

கம்புக்கான விலை குறைப்பால் விவசாயிகள் வேதனை! மூட்டை ரூ.12,000லிருந்து ரூ.6,200க்கு குறைந்தது

கம்புக்கான விலை குறைப்பால் விவசாயிகள் வேதனை! மூட்டை ரூ.12,000லிருந்து ரூ.6,200க்கு குறைந்தது

கம்புக்கான விலை குறைப்பால் விவசாயிகள் வேதனை! மூட்டை ரூ.12,000லிருந்து ரூ.6,200க்கு குறைந்தது


ADDED : செப் 09, 2023 05:35 AM

Google News

ADDED : செப் 09, 2023 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் கம்புக்கான விலை பாதியாக குறைந்ததால் விரக்தியடைந்த விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் தாலுகாவில் பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்புக்கு அடுத்ததாக உளுந்து, கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளை பயிரிட்டு வருகின்றனர். ஆனால், தானிய பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக விழுப்புரம் அடுத்த காணை, கோலியனுார், விக்கிரவாண்டி வட்டார பகுதிகளில், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி பயிராக கம்பு, உளுந்து பயிரிடுகின்றனர். அந்த வகையில், பரவலாக கம்பு பயிரிட்டு அறுவடை செய்து, தற்போது விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்கு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று கெடார், வெங்கத்துார், அன்னியூர், வாழப்பட்டு, ஆரியூர், வெள்ளேரிப்பட்டு, திருக்குணம், காணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அறுவடை செய்த கம்பை விழுப்புரம் கமிட்டிக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆனால், கம்புக்கு உரிய விலை இன்றி, நேற்று ஒரே நாளில் 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மார்க்கெட் கமிட்டி எதிரே மதியம் 12:30 மணிக்கு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் மேற்கு போலீசார், விவசாயிகளை சமாதானப்படுத்தி, உள்ளே அழைத்துச்சென்றனர். அங்கு, கமிட்டி கண்காணிப்பாளர் செல்வம் உள்ளிட்டோர், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் தெரிவித்ததாவது:

தற்போது நாட்டு கம்பு சீசன் அறுவடை முடிந்து, விற்பனைக்கு வருகிறது. ஏக்கருக்கு அதிகபட்சம் 5 மூட்டை அளவில் கம்பு விளைகிறது.

போதிய மழை இல்லாததால், மானாவாரியில் பயிரிட்டு கொண்டு வந்திருக்கிறோம். கம்புக்கு உரிய விலை வைக்காமல் ஏமாற்றும் நிலை தொடர்கிறது.

இந்த மார்க்கெட் கமிட்டியில், நேற்று கம்பு (100 கிலோ) ஒரு மூட்டை 7,500 ரூபாய்க்கு விலை இருந்தது. இன்று (நேற்று) திடீரென 1,000 ரூபாய் விலை குறைப்பு செய்துள்ளனர். 4 வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுக்குள் பேசிக்கொண்டு, மிகவும் குறைந்த விலை போட்டுள்ளனர்.

கடந்த மே மாதம், 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்கு எடுத்தனர். தற்போது, விலை குறைப்பு செய்துள்ளனர்.

திருக்கோவிலுார், விக்கிரவாண்டி மார்க்கெட் கமிட்டியில் 7,000 ரூபாய்தான் விலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த 6 மாத காலத்திற்குள் இந்தளவுக்கு விலையை குறைத்து விட்டனர்.

கம்பு அதிகளவில் வரும்போது, இவர்கள் பாதியளவு விலை குறைத்து எடுக்கின்றனர். வரத்து குறையும் போது மட்டும் விலை வைக்கின்றனர். ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், கம்புக்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட விலையையே வழங்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை முடிவில், விருப்பமுள்ள விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த கம்பை தற்போது விற்பனைக்கு வழங்கலாம். விலை கட்டுப்படியாகதவர்கள், இருப்பு வைத்து, பிறகு விலை வரும்போது கொடுக்கலாம் என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பெரும்பாலான விவசாயிகள், செலவு செய்து கம்பை எடுத்து வந்து விட்டோம் என, விற்பனைக்கு கொடுத்தனர். ஒரு சில விவசாயிகள் மட்டும், விற்பனைக்கு கொடுக்காமல், கம்பை திரும்ப எடுத்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us