/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சப்-- கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
/
சப்-- கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
சப்-- கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
சப்-- கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
ADDED : டிச 16, 2025 05:15 AM

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சந்திரபிரபு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை 11:00 மணியளவில், திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
டிட்வா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் சவுக்கு பயிர்களுக்கு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பீடு குறித்து கணக்கீடு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, 11:30 மணியளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

