/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் புகார்
/
மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் புகார்
மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் புகார்
மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் புகார்
ADDED : மார் 18, 2025 04:48 AM
விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் கருவி, உழவு ஓட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் கருவிகளை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தகுந்த மாடலில் பெற வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் துறை சார்பில் மானிய விலையில் வழங்கும் கருவிகள் அனைத்தும் ஒரே நிறுவனத்திற்கு அனுமதி அளித்து அந்த நிறுவனத்திடம் இருந்து கருவிகளை பெற வேண்டும் என்பதால் பல்வேறு சங்கடங்களை விவசாயிகள் அனுபவித்து வருகின்றன.
அந்த நிறுவனம் வழங்கும் கருவிகள் அனைத்தும் நீண்ட நாள் பயன்பாட்டிற்கு வராமல் தரமற்று இருப்பதால் மானிய விலையில் வாங்கும் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இது பற்றி விவசாயிகள் கூறுகையில், 'ஒரே நிறுவனத்திடம் இருந்து கருவிகளைப் பெற ஒப்பந்தம் விடுவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட மானிய விலையில் வழங்கும் கருவிகள் ஒரே நிறுவனத்தில் இருந்து பெறாமல் விவசாயிகளுக்கு ஏற்ற மாடலில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இது குறித்து கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.