sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை

/

 நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை

 நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை

 நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை


ADDED : பிப் 06, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் நெல்லை தேக்கி வைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கடந்த, 2ம் தேதி துவங்கப்பட்டது.

இங்கு திருவெண்ணெய்நல்லுார், பெரியசெவலை, கொத்தனுார், சரவணம்பாக்கம், மழையம்பட்டு, தடுத்தாட்கொண்டூர், காந்தலவாடி, மடப்பட்டு, மணக்குப்பம் உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கிலிருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒரு மாதத்திற்கு முன்னரே நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து கொட்டி வைத்துள்ளனர்.

இந்தாண்டு கொள்முதல் நிலையம் காலம் கடந்து திறக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், திறக்கப்பட்டும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் நெற்பயிர்கள் நனைந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து நீண்ட நாட்களுக்கு நெல்லை கொட்டி வைப்பதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நெல்லை விரைவில் கொள்முதல் செய்து, பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us