/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆடு, மாடுகள் திருட்டு விவசாயிகள் அச்சம்
/
ஆடு, மாடுகள் திருட்டு விவசாயிகள் அச்சம்
ADDED : மே 09, 2025 12:23 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆடு, மாடுகள் திருட்டு தொடர்வதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரத்தில் நகர மற்றும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில், ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல், வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், ஆடு, மாடுகளையும் மர்ம நபர்கள் திருடிச் செல்வதும் தொடர்கிறது.
விழுப்புரம், சாலாமேடு, மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் குமார். கட்டட தொழிலாளி. ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 2 பசு மாடுகள் சில தினங்களுக்குமுன் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் கட்டியிருந்த 3 ஆடுகளும், ரவி என்பவரது வீட்டிலிருந்த ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் வரும் மர்ம நபர்கள், ஆடு மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றி செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நகை பணம் திருடுவதுபோல், தற்போது ஆடு, மாடுகள் திருட்டு அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.