/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆத்மா திட்டத்தில் உழவர் வயல் விழா
/
ஆத்மா திட்டத்தில் உழவர் வயல் விழா
ADDED : அக் 26, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: சின்னத்தச்சூரில் உழவர் வயல் விழா நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி வட்டார வேளாண் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர் கங்கா கவுரி தலைமை தாங்கினார்.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் ஜமுனா, விவசாயிகளுக்கு உளுந்து, நிலக்கடலை, நெற்பயிர்களில் பூச்சி மேலாண்மை, அதிக மகசூல் உடன் லாபம் பெறும் தொழில்நுட்ப கருத்துகளை வழங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார், உதவி வேளாண்மை அலுவலர் பூங்காவனம், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சங்கீதா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் இளவரசன், அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.

