/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவர் பேரியக்க மாநாடு எம்.எல்.ஏ., அழைப்பு
/
உழவர் பேரியக்க மாநாடு எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : டிச 20, 2024 04:55 AM
செஞ்சி: திருவண்ணாமலையில் பா.ம.க., சார்பில் நடக்கும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்க வேண்டும் என சிவக்குமார் எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ம.க.,வின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் நாளை 21ம் தேதி நடைபெற உள்ளது.
மாநாட்டில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள் பேச உள்ளனர்.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக ஊடகப் பேரவை, தொழிற்சங்கம், விவசாயிகள் பிரிவு மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.